×

ஆன்லைன் கோளாறால் வீட்டு வரி ரசீது தாமதம்

இளம்பிள்ளை, ஏப்.30: தமிழகத்தில் கிராம பஞ்சாயத்துகளில் புதிதாக வீடு மற்றும் தொழிற்சாலைக்கு வீட்டு வரி ரசீது கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றிய பகுதி பஞ்சாயத்துக்களில் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிம் கேட்டபோது, ஆன்லைன் கோளாறால் ரசீது எதுவும் போட முடியாத சூழ்நிலை உள்ளது என தெரிவித்தனர். இதனால் புதிய வீடு கட்டுபவர்கள், கடைகள், தொழிற்சாலை உள்ளிட்டவைக்கு மின் இணைப்பு பெறுவதிலும், குடிநீர் இணைப்பு பெறுவதற்கும், ஜிஎஸ்டி விண்ணப்பிப்பதற்கும், வங்கி கடன் பெறுவதற்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

The post ஆன்லைன் கோளாறால் வீட்டு வரி ரசீது தாமதம் appeared first on Dinakaran.

Tags : Yumupillai ,Gram Panchayats ,Tamil Nadu ,Salem District ,Makudanjawadi Union ,Panchayats ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் பகுதியில் கடை வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்